நோக்கங்கள் எதற்காக
மக்கள் தேவ சபை ஐக்கியத்தினூடகவே செயற்படுகின்றது. நாம் நமஸ்காரம் ஐக்கியம், சீஷத்துவம், ஊழியம், சுவிஷேசம் ஆகிய நோக்கங்களை நிறைவேற்ற அழைக்கப்பட்டிருக்கின்றோம். இந்த ஐந்து நோக்கங்களும் வளர்ச்சிபெறும்போது சபையின் ஆரோக்கியமாக சமநிலைப்படுத்தப்பட்டு தேவனுடைய பரிபூரணத்துவத்தின் திட்டத்தில் உறுதியான வளர்ச்சிபெற தகமைகொள்கிறது என்பதை நாம் விசுவாசிக்கின்றோம்.

நமஸ்காரம்.
இதற்கூடாக நாம் தேவனுடைய இதயத்தை திருப்திபடுத்துவதை விசுவாசிக்கின்றோம். பாடலுக்கூடாகவும், எமது திறமைகளை பாவிப்பதற்கூடாகவும், வார்த்தையிலும், கொடுப்பதிலும், செயற்பாட்டிலும்கொண்டாடி, எமது நன்றியையும், அன்பையும் வெளிப்படுத்தி அவரின் பிரசன்னத்தில் இருப்பதே எமது விருப்பமாகும். எமது இந்த உலகத்தில் தேவனை நமஸ்கரித்து வாழும் வாழ்க்கையே அவரை கனப்படுத்துகின்றது என விசுவாசிக்கின்றோம். மேலதிக விபரங்களுக்கு போதகர் நிமேந்திவை தொடர்புகொள்ளவும். மின் அஞ்சல் [email protected]

ஐக்கியம்
ஒவ்வொரு விசுவாசியானதும் தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சியில் நாம் விசுவாசம் கொண்டுள்ளோம். ஒவ்வொரு விசுவாசியும் சீஷராகுதலும் மற்றோரை சீஷராக்குதலிலும் வலுவடையச் செய்வதே எமது அருட்பணியாகும். சீஷத்துவம் என்பது தேவனில் அன்பு செலுத்தி அவருக்கு முழுமையாக கீழ்படிவதேயாகும். இது அவரை அவரது வார்த்தையின் மூலம் அவரை அறிதலும் அதன்படி ஜீவிப்பதையுமே கருத்தாக கொண்டுள்ளது. எமது கிறிஸ்தவ கல்விக்கான வகுப்பில் கற்றுக்கொள்வதின் மூலம் இந்நோக்கத்தை நிறைவேற்றுகின்றோம். தொடர்புகொள்ளவும்: போதகர் லகி அந்தனி. மின் அஞ்சல் [email protected]

ஊழியம்

தேவ அன்பை செயல்முறைப்படுத்துவதை நாம் விசுவாசிக்கின்றோம். ஒவ்வொரு விசுவாசியையும் ஊக்கப்படுத்தி நோக்கத்தை சரியாக அறிந்து அதன்படி செயற்பட்டு சமூகத்தில் வல்லமையான தாக்கத்தின் மாற்றத்தை ஏற்படுத்தி நம்பிக்கையுடன் செயல்படுவதை முக்கிய நோக்காக கொண்டு செயல்படுவதையே நாம் விசுவாசிக்கின்றோம். சபை என்ற ரீதியில் சமூகமாற்றத்திற்காக உபகாரம் செய்வதையும் இன்னும் அநேக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதிலும் ஆயத்தமாக இருக்கின்றோம். தொடர்புகொள்ளவும்., போதகர் சமந்தா பத்மகுமார மின் அஞ்சல் [email protected]

சுவிசேஷம்
இதுவரை தேவனுடைய நற்செய்தியை கேட்டிராத மக்களுக்கு நற்செய்தியை எடுத்து செல்லும் தேவனுடைய தூதர்களாக நாம் ஏற்படுத்தப்பட்டுள்ளோம் என்பதனை விசுவாசிக்கிறோம் எமக்கு சுவிசேஷமானது சபையாகவும் தனி நபர்களாகவும் சமூகத்தை அடையவும் விசேஷமாக தேவனுடைய அன்பையும் கிருபையையும் மக்கள் மத்தியில் பகிர்ந்துகொள்வது தனிப்பட்ட முறையில் எமக்கான தெரிவு என்று என்று சிந்திப்பதை விட தேவன் நாம் நிறைவேற்றும்படி நமக்கு கொடுத்துள்ள ஒரு பெரிய திட்டம் என்று கூறுவதே தகும் தொடர்புகொள்ளவும். போதகர் ராஜா லோகநாதன் மின்னஞ்சல் [email protected]